நாடுகள் சிலவற்றிற்கு குடிவரவு சட்டம் இறுக்கம்

369 0

screen-shot-2016-05-14-at-10-04-44பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகள் சிலவற்றின் பிரஜைகளுக்கு வருகைக்கு பின்னரான வீசா நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர்கள் நாட்டினுள் பிரவேசிப்பதற்கான நடைமுறைகள் இறுக்கப்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் நாட்டினுள் உட்பிரவேசிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியழ்வு திணைக்களத்தின் வீசா கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளர் மத்தும பண்டார வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த தீர்மானம் போதைப் பொருள் வர்த்தகர்களை தடுக்கும் நோக்கிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சிரியா, நைஜீரியா, பாகிஸ்தான், கமரூன், எகிப்து, பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்குவதற்கு முன்னதாக புலனாய்வுப் பிரிவிடம் அனுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.