உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்களை 10 நாட்களுக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் பொலிஸாருக்கு கடும் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வுத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் 17 ஆம் திகதி உடுவில் பகுதியினைச் சேர்ந்த குடும்ஸ்தரான சிவகுமாரன் பிரணவன் என்பவர் சமூகவிரோதக் குழு மேற்கொண்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் உயிரிளந்திருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் பிரதான் சந்தேக நபர்கள் கைது செய்யப்படாத போதிலும், பிரதான சந்தேக நபர்களுடன் இணைந்து இக் கொலைக்கு உடந்தையாக இருந்து, வாள்வெட்டு நடாத்துவதற்காக அவர்களை மோட்டார் சைக்கிலில் ஏற்றிச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை அவரை இன்று புதன்கிழமை வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நபரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், இவ்வழக்கின் பிரதான சந்தேக நபர்களை இன்றும் 10 நாட்களுக்குள் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு கடுமையான உத்தரவினை பிறப்பித்தார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

