நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்ட செய்தியை ஏற்றுக்கொள்வதில்லை என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கியதாக நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்டுள்ள செய்தி அடிப்படையற்றது என்று இலங்கையிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதானி கூறியுள்ளார்.
அந்த செய்தியில் உள்ள விடயங்கள் பக்கச்சார்பானது என்றும் அவை உண்மையான தகவல்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றின் வணிக நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு அந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளதால் அது தொடர்பில் இந்த சந்தரப்பத்தில் இராஜதந்திர ரீதியாக கருத்து தெரிவிக்க முடியாது என்றும் சீன தூதுவராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதானி கூறியுள்ளார்.

