காணாமற்போன யானையை கண்டுபிடிக்க STFஇன் ஒத்துழைப்பு

335 0

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காணாமற்போன நீண்ட தந்தத்தையுடைய யானையைத் தேடி, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துவரும் தேடுதல் நடவடிக்கைக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

கலாவெவ வனப்பகுதியில், இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கல்கிரியாகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி டீ.ராமசிங்க தெரிவித்துள்ளார்.

கஹல்ல- பள்ளேகெல வனத்திலும் கல்கமுவ மற்றும் ரெஸ்வெஹேர வனப்பகுதியிலும், குறித்த யானையைத் தேடும் நடவடிக்கை, இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும், குறித்த யானை, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் கலாவெவ வனப்பகுதியில், இன்று (28) ​தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்க, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

Leave a comment