வடக்கில் ஆயுதங்கள் கிடைத்தமை தொடர்பில் தவறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தெற்கில் உள்ளவர்களுக்கு புதிய விடயமாக இருந்தாலும் வடக்கில் உள்ளவர்களுக்கு அவ்வாறு இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் அதற்காக தெற்கின் நிலமையை வடக்கிற்கு கொண்டு செல்லதே நாம் செய்ய வேண்டிய தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

