டொலரின் மதிப்பு 200 ரூபா வரை அதிகரிப்பதை தடுக்க முடியாது-பந்துல குணவர்தன

332 0

அரசாங்கம் கொண்டுள்ள பொருளாதார கொள்கை காரணமாக டொலரின் மதிப்பு 200 ரூபா வரையில் அதிகரிப்பதை தடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

நிதியமைச்சினால் பொது மக்களின் நிதி ஒழுங்கற்ற முறையில் கையாளப்படுவதாக கூறி அது சம்பந்தமாக தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இன்று அவர் நிதியமைச்சுக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நிலை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது கடன்களை மீளச் செலுத்துவதற்கு போதுமான வருமானம் இருக்கவில்லை என்று பிரதமர் கூறும் கருத்து பொய்யானது என்றும் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கடன் தவணையை செலுத்தியதன் பின்னரும் வருமானத்தில் சிறு தொகை எஞ்சியிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

Leave a comment