இலங்கைக்கான இறக்குமதி வரியை குறைக்க சீனா தீர்மானம்

215 0

இலங்கை உட்பட ஐந்து நாடுகளுக்கான, சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

அதன்படி சோயா, போஞ்சி ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியானது, 3% – 0% வரை குறைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரசாயனத் திரவியங்கள், செயற்கை உற்பத்திகள், மருத்துவப் பொருட்கள், ஆடைகள், இரும்பு மற்றும் உயிர் வாயுக்கான வரிகளை, 3% – 2.1% ஆக குறைப்பதற்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment