ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்னும் ஒரு மாதமளவில் இலங்கை திரும்புவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அவரை நாட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. அரசாங்கத்துக்கு உதவியாக நாம் அவரை அழைத்து வருகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
உதயங்கவின் பிள்ளைகள் அங்குள்ள பாடசாலைகளில் படிப்பதனால், அவர்களது படிப்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு வருவதற்கு ஒரு மாதமளவு காலம் தேவைப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கதிர்காமத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

