ரணில் எதிர்ப்பு அணி பொதுச் சின்னத்தில் போட்டி-லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

491 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து ஜனாதிபதித் தேர்தலில் பொதுச் சின்னம் ஒன்றில் களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் பிரிந்து செயற்பட்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை களமிறக்கினால் அந்த அபேட்சகரினால் வெற்றிபெறமுடியாது.

ஆகவே சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து ஜனாதிபதித் தேர்தலில் பொதுச் சின்னம் ஒன்றில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கவுள்ளோம்.

மேலும் களமிறங்கும் அபேட்சகர் நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம்கள் உட்பட அனைவரினதும் ஆதரவைப்பெற்ற முன்மாதிரியானவராக இருக்க வேண்டும். கட்சியிலுள்ள சகல தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வாறான உறுப்பினரை தெரிவுசெய்ய வேண்டும் என்றார்.

Leave a comment