தாக்குதலுக்கு இலக்கான சவராண முஸ்லிம் வித்தியாலய மாணவன் உயிரிழப்பு

2 0

மாணவர்கள் சிலரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவரொருவர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சிலாபம் – சவராண முஸ்லிம் வித்தியாலயத்தில், தரம் 11 இல் கல்வி கற்ற மொஹமட் வைஸ்ஸூல் (வயது 16) என்ற மாணவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையின் பிரதான மாணவ தலைவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 15ம் திகதி இரவு மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் வீடு திரும்பிய போது அவரை மறித்த மாணவர்கள் சிலர் இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதன்போது , குறித்த மாணவன் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மாணவர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post

திருகோணமலையில் கரையோர பாதுகாப்புத் திட்டம்

Posted by - September 21, 2017 0
ஜனாதிபதியின் பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில் துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.…

நான்கு சந்தேக நபர்கள் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது!

Posted by - April 29, 2018 0
அத்துருகிரிய மற்றும் தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற பல மனித கொலைகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் டி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்தவருடம் 1200 வைத்தியர்கள் உருவாக மாட்டார்கள்- சுசில் குற்றச்சாட்டு

Posted by - September 23, 2017 0
புதிய அரசியலமைப்பை அமைப்பதை விடவும் சைட்டம் பிரச்சினையின் மீது அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஏழு மாதங்களாக…

சய்டம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – லோட்டஸ் வீதி மூடல்

Posted by - May 10, 2018 0
கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சய்டம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே இந்த வீதி தற்காலிகமாக மூடப்ப்ட்டுள்ளது.

SARICC இனை ஸ்தாபிப்பதற்கு யோசனை !

Posted by - February 21, 2018 0
தென்னாசிய வலயத்தில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அவ்வலய நாடுகளுக்கு இடையில் South Asian Regional Intelligence and Coordination Centre…

Leave a comment

Your email address will not be published.