நாட்டில் அனைத்து நபர்களினதும் சுகாதார நிலைமைகள் பற்றிய தகவல்களை கணனி மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் வளர்ச்சியடைந்தாலே நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். தற்போதை அரசாங்கத்தின் கீழ் சுகாதாரத் துறையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

