தேரரின் ஹிட்லர் ஆட்சி குறித்த கருத்து தவறு, வீதியில் இறங்க தயார்- குமார வெல்கம

1 0

இந்த நாட்டை ஆட்சி செய்ய ஹிட்லர் ஒருவர் தேவை என முக்கிய மகாநாயக்க தேர்களில் ஒருவர் கூறிய கருத்தை தெளிவாகவே மறுக்கின்றோம் என மஹிந்த சார்பு பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

ஹிட்லர் ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவாராக இருந்தால் அதற்கு எதிராக தனது உயிரைக் கொடுத்தாவது போராட தயாராகவுள்ளோம். இதற்காக கட்சியிலிருந்தும் வெளியேற தயங்க மாட்டோம்.

எமக்கு இந்நாட்டை ஆட்சி செய்ய ஜனநாயகத் தலைவர் ஒருவரே தேவையாகும். இராணுவத்துக்கும் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் குமார வெல்கம மேலும் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வில் உரையாற்றும் போது அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இக்கருத்துக் குறித்து இவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

Related Post

நிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும் – மங்கள

Posted by - May 22, 2018 0
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஊடக மற்றும் நிதியமைச்சினால்…

பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதி கோர விபத்து

Posted by - February 7, 2019 0
பஸ் வண்டியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று அதிகாலை 5.00 மணியளவில்…

உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை

Posted by - February 22, 2017 0
உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை விடுத்து, 53 லட்சம் மக்களின் கையொப்பத்தினை பெறும் நடவடிக்கை மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில்…

சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை – ஆனந்த குமாரசிறி

Posted by - August 2, 2018 0
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனப் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு…

தற்போதைய அரசாங்கம் நாட்டின் அனைத்து வளங்களையும் வௌிநாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது-நாமல்

Posted by - July 28, 2018 0
தற்போதைய அரசாங்கம் நாட்டின் அனைத்து வளங்களையும் வௌிநாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். நாட்டின் வளங்களை பாதுகாக்கும் தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை…

Leave a comment

Your email address will not be published.