கல்கிஸ்ஸ தர்மபால மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகாமையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (22) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சந்தேக நபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

