நாட்டின் சில பகுதிகளில் கடல் கொந்தளிப்பு

3 0

புத்தளத்திலிருந்து மன்னார் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Post

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – சபாநாயகர் சந்திப்பு

Posted by - December 7, 2017 0
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஷாஹித் அஹமட் ஹஷ்மத் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் இருநாட்டு நீண்டகால…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – மீட்பு பணிகள் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - April 20, 2017 0
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவை அடுத்த மீட்பு பணிகள் இன்று 7ம் நாளாகவும் தொடர்வதாக, இராணுவப் பேச்சாளர் ரொசான் செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.  நேற்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின்…

தொலைபேசியை CID யில் ஒப்படைக்குமாறு அர்ஜுன மகேந்திரனுக்கு உத்தரவு

Posted by - July 24, 2017 0
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடைய கையடக்கதொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களைக் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கையளிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை…

இதய அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பொருட்களின் விலை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

Posted by - August 6, 2017 0
சில மருத்துவ உபகரணங்களுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

பல துறைகளில் இன்று காலை முதல் பணிப் பகிஸ்கரிப்பு

Posted by - May 5, 2017 0
மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிதொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.