கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இன்றைய தினம் தாம் ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்ப்பதாக பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்றைய தினம் ஆராயப்படவுள்ள ஞானசார தேரரின் மேன்முறையீடு, பெரும்பாலும் ஞானசார தேரர் சார்பில் மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பாக இருக்கும் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

