தேரர்களை விகாரைக்குள் அடக்கும் நடவடிக்கையே ஞானசாரின் கைது- கம்மம்பில

315 0

தேரர்களை விகாரைக்குள் மாத்திரம் அடக்கும் ஒரு நடவடிக்கையாகவே ஞானசார தேரரின் வழக்குத் தீர்ப்பு காணப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். பொதுபல சேனாவின் ஞானசார தேரருடைய தண்டனை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அஸ்கிரிய பீட மகாநாயகர் உட்பட பலரும் இந்நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு அவசியமற்றது எனவும் அதனைக் கொண்டுவர விடுவதில்லையெனவும் அண்மையில் குறிப்பிட்டனர். ஞானசார தேரரை சிறையில் போடுவதற்கு பயன்படுத்திய விதிமுறைகளைப் பின்பற்றினால்,  இவர்களையும் காவியுடையைக் கலைந்து ஜம்பர் அணிவிக்க  அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பர் எனவும் உதய கம்மம்பில மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a comment