தேரர்களைக் கைது செய்வதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை பெறப்படல் வேண்டுமென மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில், சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை குறித்து ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பில் இதற்கான ஏற்பாடு உள்ளது. பௌத்த பிக்குமாருக்கு எதிரான வழக்குகளை விசாரணை செய்வதற்கென புறம்பான நீதிமன்றமொன்று உருவாக்கப்படல் வேண்டும்.
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் துரித கதியில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளதைப் போன்று ஏனைய வழக்குகளையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதில்லையே என மக்கள் கவலைப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

