மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்கும் மஹிந்த ராஜபக்ஷ

317 0

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாவது பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது நாட்டின் சகல பிரஜைகளின் முழு ஆதரவுடனும் இந்தப் பொறுப்பு அவருக்கு வழங்கப்படும். அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து அவர் விலகுவார் என்றும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்

Leave a comment