களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரும்புக் கம்பியால் பழங்கள் பறிக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த மாணவனுக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 23 வயதுடைய மூன்றாம் வருட மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

