ரூபாவின் வீழ்ச்சியால் நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நட்டம்-ஷெஹான் சேமசிங்க

23 0

அமெரிக்க டொலரின் பெறுமானம் அதிகரித்து கொண்டே செல்வதனால் நாட்டில் இன்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் நாட்டுக்கு 753.8 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதிலிருந்து ரூபாவின் பெறுமானத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது போயுள்ளது. அதனால் டொலரின் பெறுமானம் உயர்வடைந்துகொண்டே செல்கிறது. இதனால் இன்று நாட்டுக்கு  753.8 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்வதற்காக மக்கள் மீது வரிச்சுமை அதிகரிக்கப்படுகிறது. அரசாங்கத்திடம் ஒழுங்கமைப்பட்ட பொருளாதாரக் கொள்கை இல்லாததனாலேயே இவ்வாறு வரிச்சுமையை அதிகரிக்கின்றனர்.

நாட்டில் இன்று மீண்டும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆட்சியில் ஒழிக்கப்பட்ட பாதாள உலக்குழுக்களை நல்லாட்சி அரசாங்கமே மீண்டும் நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளது. எனவே அக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு அரசாங்கமே அனுசரணை வழங்கி வருகின்றது என்றார்.

Related Post

விமானத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய இலங்கையர் விளக்கமறியலில்

Posted by - August 25, 2017 0
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க காரணமாக இருந்த இலங்கையர்…

நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

Posted by - November 2, 2017 0
இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன் புல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பாராட்டு தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தில் பல பகுதிகளில் கடும் மழை (காணொளி)

Posted by - May 26, 2017 0
மலையகத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக சில வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நோட்டன் கொழும்பு, ஹட்டன் கொழும்பு, ஹட்டன் நுவரெலியா ஆகிய பிரதான வீதிகளில் பல இடங்களில்…

இந்தியாவிடம் முடியாததை சிங்கபூருடன் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சி

Posted by - May 13, 2018 0
இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தின் வாயிலாக செய்துக்கொள்ள முடியாத அனைத்து விடயங்களையும் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக செய்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம்…

விஷேட உரை ஒன்றை ஆற்ற தயாராகிறாராம் மைத்திரிபால!!!

Posted by - November 27, 2018 0
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் 4ஆம் திகதி சிறப்பு மாநாடு ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்திலேயே…

Leave a comment

Your email address will not be published.