தொழிலாளர்கள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

3 0

தலவாக்கலை – லோகி தோட்டம் மிடில்டன் பிரிவில், தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக அத்தோட்டத்தை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று அடையாள வேலை நிறுத்ததில்  ஈடுப்பட்டனர்.

உரிமைகள் மற்றும் சலுகைகள் தமக்கு பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தாம் முருங்கை மரம் வெட்டுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தமக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட வேலைக்கு இதுவரை தோட்ட நிர்வாகத்தினால் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துகின்றனர்.

எனவே இந்த விடயத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் முறுகள் நிலையும் தோன்றியுள்ளது.

பலமுறை தோட்ட அதிகாரி தொழிலாளர்களை தரகுறைவாக பேசுவதாகவும், அடாவடி தனமாக நடந்துக் கொள்வதாகவும் தெரிவித்தே இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயத்தில் தொழிற்சங்கங்கள், மற்றும் சம்மந்தப்பட்டவர்கள் தீர்க்கமான முடிவினை துரிதமாக பெற்றுத்தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related Post

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்- முச்சக்கரவண்டி சங்கம்

Posted by - May 11, 2018 0
முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை சுயதொழில் முச்சக்கர வண்டிசங்கம் அறிவித்துள்ளது.…

எந்தவொரு தனி நபருக்கும் நாம் ஆதரவில்லை – ஜே.வி.பி

Posted by - November 2, 2018 0
எந்தவொரு தனி நபருக்கும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்காது என அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று காலை…

பொது இடத்தில் குப்பை கொட்டிய 14 பேருக்கு வழக்கு பதிவு

Posted by - June 29, 2017 0
ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் பொது இடங்கைளில் குப்பைகளை கொட்டிய 14 பேருக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டுள்தாகவும் தொடர்ந்தும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது…

மைத்திரியுடன் மஹிந்த இணைவது குறித்து 01 ஆம் திகதி தீர்மானம்

Posted by - October 29, 2017 0
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு பதிலளிப்பதா? இல்லையா என்பது குறித்து…

பம்பலபிட்டி வர்த்தகர் கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 29, 2016 0
பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மொஹமட் சுலைமான் கடந்த ஒகஸ்ட் மாதம்…

Leave a comment

Your email address will not be published.