ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயார்-பொது பல சேனா

7 0

அரசாங்கம் இராணுவ வீரர்களுக்கு எதிரான முன்னெடுத்த அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்பட்டமைக்கு ஞானசார தேரருக்கு கிடைத்த பரிசு இச் சிறைதண்டனை ஆகும். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கவனத்தில் கொள்ளவில்லை என்றால் ஒட்டுமொத்த பௌத்தர்களையும் வீதியில் இறக்கி போராட தயாராக உள்ளதாக பொது பல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோமாகம நீதவான் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மகால் கந்த சுகத தேரர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

பௌத்த பிக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்கப்படும் வரை எமது போராட்டத்தை நிறுதப்போவதில்லை. ஞனசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தாலும், எதிர் காலத்தில் அவர் இல்லாமல் போனாலும் அவரது குரல் என்றும் ஓயப்போவதில்லை.

பௌத்த பிக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை எமது போராட்டம் ஓயப்போவதில்லை. அதே வேலை இன்று முதல் புதிய வகையில் எமக்கான நீதிக்காக போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே கடந்த தேர்தலில் இந்த அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அது மாத்திரமல்ல எதிர்வரும் தேர்தலிலும் இந்த அரசாங்கம் தோல்வியையே சந்திக்கும் என்பதில் மாற்றம் இவ்லை.

ஞனசார தேரர் விரைவில் விடுதலை செய்யப்படுவார். அதற்காக எந்த மட்டத்திலும் சென்று போராட நாம் தயாராகவுள்ளோம். எவ்வாறிருப்பினும் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய செயற்பாடுகள் பற்றி பேசுவதை நிறுத்தப்போவதுமில்லை. அதனை யாராலும் நிறுத்தவும் முடியாது. sw

Related Post

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம்

Posted by - January 4, 2019 0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆணின் சடலம் ஒன்று தற்போது மிதந்து கொண்டிருக்கிறது. குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை…

அத்திடிய கொள்ளை சம்பவம் – சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் தகவல்

Posted by - August 14, 2017 0
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அத்திடிய பகுதியில் தனியார் வங்கியொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக பாதாள உலக கோஷ்டியின் தலைவர் கொஸ்கொட சமந்தவாக…

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இருவர் ஐ.தே.க.வுக்கு தாவினர்

Posted by - December 4, 2018 0
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டனர்.மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம்…

அர்ஜூன் அலோசியஸ் வழங்கியுள்ள போலியான தகவல்

Posted by - September 15, 2017 0
பர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவில் வழங்கியுள்ள போலியான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் தலைவர் கசுன் பலிசேன இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். இன்று…

நாட்டைப் புரட்டி விட்டு கிராமத்தையும் புரட்ட இந்த அரசாங்கம் தயாராகியுள்ளது- கோட்டாப

Posted by - July 22, 2018 0
இந்த நல்லாட்சி அரசாங்கம் முழு நாட்டையும் தேசிய மட்டத்தில் புரட்டி விட்டு, கிராமத்தையும் புரட்டுவதற்கு தயாராகியுள்ளதாகவும் இதற்காகவே கம்பெரலிய செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்…

Leave a comment

Your email address will not be published.