மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் இணைவார்கள் – டிலான்

3 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணி உறுப்பினர்களின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 40 ஆண்டுகால அரசியல்வாதியாகவும் 17 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டு வந்த மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளராக களமிறங்கி கட்சியை வீழ்த்துவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

எனினும் எதிர்பாராத நேரத்தில் அது நடந்தது. அதேபோல் இன்று வலது பக்கம் பயணிக்கும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன எதிர்பாராத நேரத்தில் இடதுபக்கம் சமிக்ஞை காட்டுவார்  என்பதையும் எதிர்பார்க்கலாம். தேசிய அரசாங்கத்தில் அவர் இருந்தாலும் மீண்டும் சுதந்திர கட்சியை பலப்படுத்த மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோப்பார் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.

வடகொரிய தலைவர் கிம் யொங் உன்னும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இணைவார்கள் என்பதை யார் எதிர்பார்த்தது, ஆனால் அவர்கள் இணைந்து இன்று உலகையே வியக்க வைத்தனர். அதேபோல் ஜனாதிபதி மைத்திரியும் மஹிந்தவும் விரைவில் இணைவார்கள்.

ஆகவே மஹிந்த  ராஜபக்ஷவின்  தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது ஆதரவில் மீண்டும் எமது ஆட்சியை ஆரம்பிப்போம் என்பதில் சந்தேகம் இல்ல‍ை. இதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டுமாயின் அதற்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் ஆதரவு அவசியமானது. அவரால் மட்டுமே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க முடியும். ஆகவே மைத்திரபால சிறிசேனவின் ஆதரவுடன் மஹிந்த  ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் மீண்டும் எமது ஆட்சி ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

Related Post

இதுவரையான வெளியான முடிவுகளில் யார் முன்னிலை…?

Posted by - February 11, 2018 0
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவருகின்ற நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின்படி 7 மாவட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை…

நாட்டினுள் சர்வதேசத்தின் தலையீடு இருக்கக்கூடாது -சரத் வீரசேகர

Posted by - November 1, 2018 0
நல்லாட்சி அரசாங்கம் உடைந்து, புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இராணுவத்தில் பணியாற்றியவன் என்ற வகையில் மகிழ்ச்சியடைகின்றேன். மூன்று தசாப்தகால யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்த இராணுவத்தினரை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்ததுடன்,…

குடிநீரில் மசகு எண்ணெய் : மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 3, 2017 0
எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் எண்ணை கசிவினால் குடிநீர் மாசடைகின்றமைக்கு கண்டனம் தெரிவித்து குயில்வத்தை பகுதியில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு –…

மனித உரிமை மீறல்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது

Posted by - October 14, 2017 0
மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது, இருந்தும் ஆணைக்குழுக்களை நியமித்து குழுவாக இணைந்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 

நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - July 26, 2018 0
மஹவெல, கல்கடுல்ல ஆற்றில் குளிக்க சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கல்கடுவ பாலத்திற்கு அருகில் குளிக்க சென்ற நபர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக…

Leave a comment

Your email address will not be published.