முன்னாள் தவிசாளரின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு

716 0

2012 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த குர்மன் ஷேக் என்பவரை கொலை செய்தமை மற்றும் அவருடைய ரஷ்ய நாட்டு காதலியை பாலியல் பலாத்காரம் செய்தமைக்காக 20 வருட சிறை தண்டனை அனுபவித்து வரும் நால்வர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சம்பத் புஷ்ப விதானபதிரன உட்பட நால்வர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எஸ். துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (12) இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தங்காலை பிரதேச சபை தவிசாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இரண்டு தடவை மாரடைப்பால் முன்னாள் தவிசாளர் சம்பத் புஷ்ப விதானபதிரன பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், சட்ட மா அதிபரின் உதவியுடன் முன்னாள் தவிசாளர் சம்பத் புஷ்ப விதானபதிரனவுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment