ஜாக்டோ-ஜியோ போராட்டம் – சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு

232 0

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபை கூட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, “பல்வேறு விளக்கங்களை கூறி வரவுக்குள் தான் செலவுகள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தையும்” தெரிவித்தார். ஆனால் பேச்சு வார்த்தைக்கு அழைப்பது பற்றி பேசவில்லை.

இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

Leave a comment