தளபதி லெப் கேணல் கலையழகனின் மனைவியை 4 ஆம் மாடிக்கு அழைக்கும் பயங்கரவாத குற்றப் பிரிவு

380 0

lt_col_kalaiyalagan2தமிழீழ விடுதலைப் புலிகளின் வடபோர்முனை கட்டளைத் தளபதியான லெப் கேணல் கலையழகனின் மனைவியை கொழும்பு 4 ஆம் மாடிவ்கு விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
தற்போது கிளிநொச்சி – விநாயகபுரத்தில் வசித்து வரும் அவரின் மனைவிக்கே எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது:-
வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப் கேணல் கலையழகனின் மனைவியை விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும்இ கலையழகன் பயன்படுத்திய கைத்துபாக்கிய தற்போதும் வைத்திருப்பதாகவும்இ புலம்பெயா் தமிழா்களுடன் தொடா்புகளை பேணுவதாகவும்இ வெளிநாடுகளில் இருந்து அதிகளவான உதவியை பெற்றுக்கொள்வதாகவும் கூறி பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினா் விசாரித்துள்ளனா்.
இந்த நிலையில் நேற்று திங்கள் கிழமை 12-09-2016 அவரது விநாயகபுரம் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினா் 15-09-2016 அன்று கொழும்பு இரண்டாம் மாடிக்கு வாக்கு மூலம் ஒன்று அளிப்பதற்காக வருகை தருமாறு அழைப்பானை வழங்கியுள்ளனா்.
தரம் ஏழு மற்றும் தரம் இரண்டில் கல்வி கற்கும் இரண்டு மகன்களுடன் வசித்து வரும் கலையழகனின் மனைவி சுமார் எட்டு வருடங்களுக்கு மேலாக புலிகள் அமைப்பின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் மாதாந்த சம்பளம் பெறும் ஊழியராக பணிபுரிந்துள்ளார் அதற்கான சாட்சிகளாக அவரோடு பணியாற்றிய பலா் இன்றும் கிளிநொச்சியில் உள்ளனா். இந்த நிலையில் அவா் ஏழு வருடங்கள் புலிகள் இயக்கத்தில் இருந்ததாக விசாரிப்பதும் அவரது கணவன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியை மனைவி தற்போதும் வைத்திருப்பதாக தெரிவித்தும் விசாரிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவங்கள் தன்னை பெரும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது என்றும் தொடா்ந்தும் இவ்வாறு நடந்தால் தானும் தனது இரண்டு பிள்ளைகளும் தற்கொலை செய்துகொள்வதனை தவிர வேறு வழியில்லை என்றும் கலையழகனின் மனைவி தெரிவித்துள்ளார்.