அரசாங்கத்துக்குள் உள்ள பிரச்சினையை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்- மஹிந்த

7696 62

எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு தனக்கு அரசாங்கத்திலுள்ள யாரையும் ஏச வேண்டிய தேவையில்லையெனவும், அவர்களே தங்களுக்குள் ஏசிக் கொள்கின்றார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொட்டாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எமக்கு இப்போது யாரின் மீதும் குரோதம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இந்த நாட்லுள்ள இரு தலைவர்களும் தங்களுக்குள் ஏசிக் கொள்கின்றார்கள். எமக்குள்ள பணி என்னவென்றால், அதனைக் கேட்டுக் கொண்டிருப்பது மாத்திரமே ஆகும் எனவும் அவர்  குறிப்பிட்டார்.

ஐந்து விரல்களும் ஒன்று போன்று இல்லையெனவும் இவ்வாறு இருப்பதனால், கருத்து முரண்பாடுகள் வருவது இயல்பானது எனவும் கூறுவார்கள். ஆனால், எமது நாட்டில் இரண்டு விரல்கள் சேர்ந்தே செயற்பட முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment