போதைப் பொருளுடன் ஒருவர் கைது

58 0
பேலியகொட, கோபியாவத்தை பிரதேசத்தில் ஐஸ் எனும் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட பொலிஸ நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 01 கிராமும் 330 மில்லிகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

களனி, பிலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published.