பின்லாந்து பிரபல தனியார் நிறுவன பிரதிநிதிகள் நாளை இலங்கை வருகை

59 0

இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி கமரய்னன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் பின்லாந்திலுள்ள முன்னணி தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக தூதுவர் ஹரி பிரதமரிடம் விளக்கிக் கூறியுள்ளார்.

இந்த தூதுக் குழுவினர் இலங்கையிலுள்ள கம்பனிகளுடன் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published.