வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்தி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது!

390 0

வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்தி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களினால் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சரியானதொரு வழி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கில் 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் முதற்கட்ட நடவடிக்கைகளுக்கான ஆரம்ப மதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மதிப்பீடுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அவற்றை இறுதிப்படுத்த முடியும் என வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணியின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மானிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொள்ள கடந்த மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தக் குற்றச்சாட்டில் இலங்கை இராணு வத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக் கும் இராணுவ குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ தெரிவித்தார்.

இராணுவ தண்டிப்புக்கு கதவுகளை திறந்துவிட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இன்று எம்மை குறைக்கூறுவது வேடிக்கையானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வினவிய கேள்வி களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

எமது ஆட்சியில் ஒருபோதும் இராணுவ காட்டிக்கொடுப்பு இடம்பெற்றவில்லை. நான் நீதி அமைச்சராக இருந்த போது ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் ஜேர்மனிய இராஜதந்திரிகள், பிரதிநிதிகள் என்னை சந்தித்து கலப்பு நீதிமன்றம் அமைக்க கேட்டதுடன் , இராணுவத்தை விசாரிக்கும் நீதிமன்ற பொறிமுறை ஒன்றினை எவ்வாறு உருவாக்கப்போகின்றீர்கள், எப்போது, எந்த அடிப்படையில் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் கேள்விகளை கேட்டனர்.

எனினும் நாம் இராணுவத்தை ஒருபோதும் தண்டிக்கப் போவதில்லை. காட்டிக்கொடுக்க போவதில்லை. இராணுவத்தை கையாளும் விதத்தில் தெரேசா மே என்ன யுக்திகளை கையாண்டாரோ அதே கொள்கையை தான் நாமும் பின்பற்றப்போகின்றோம் என்பதை உறுதியாக தெரிவித்தேன். யுத்த குற்றம் என்ற குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

எனினும் இராணுவத்தை தண்டிக்கபோவதாக கூறும் நபர்கள் கடந்த காலத்தில் இராணுவத்தை தண்டிக்க கதவுகளை திறந்தனர் என்பதை மறந்துவிடக் கூடாது. யுத்தம் முடிவுக்கு வந்து 48 மணித்தியாலம் கடக்க முன்னர் ஐக்கிய நாடுகள் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி நிலைமைகளை கூறினீர்கள்.

அதன் பின்னரே நாட்டில் தருஸ்மான் குழு செயற்பட ஆரம்பித்தது. அதன் பின்னரே இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. சர்வதேச விசாரணை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையும் அதன் பின்னரே எழுந்தது

இதற்கு முன்னர் இலங்கையில் சர்வதேச தலையீடுகள் ஏற்படும் நோக்கில் ரோம் உடன்படிக்கை செய்துகொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்ட போது அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க உடன்படிக்கையில் பாராதூரமான தன்மைகளை கவனத்தில் கொண்டு உடன்படிக்கையை கைச்சாதிடாது நிராகரித்தார்.

Leave a comment