தெல்தெனிய வன்முறை:100 அறிக்கைகள் சட்ட மா அதிபரிடம்- ரணில்

234 0

தெல்தெனியவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இன வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பல மேற்கொள்ளப்பட்டு, அவை தொடர்பான சுமார் 100 ஆவணங்கள் வழக்குத் தொடர்வதற்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தென்தெனிய சம்பவம் துர்ப்பாக்கியமான ஒன்று. பல உயிர்களை இழந்தோம். குறுகிய காலத்துக்கு அப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. இதற்காக அரசாங்கம் தனது கவலையை தெரிவித்துக் கொள்கின்றது.

இருப்பினும், குறுகிய காலத்துக்குள் அந்நிலைமை சீராக்கப்பட்டது. பின்னர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டினோம். முகநூல் பக்கத்தை தடை செய்தோம். தற்பொழுது அந்த வன்முறையுடன் தொடர்புடைய பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பிரச்சினையொன்று ஏற்பட்டபோது நீதியை முழுமையாக செயற்படுத்துவதன் ஊடாகவே இதுபோன்ற மோதல்கள் இதன்பிறகு ஏற்படாதிருக்க முடியும் எனவும்   அலரி மாளிகையில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் கூறியுள்ளார்.

Leave a comment