தலவாக்கலை லிந்துலை நகராதிபதி அசோக சேபால உள்ளிட்ட நால்வர் நுவரெலியா தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் தலவாக்கலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் லிந்துலை நகர சபையின் உறுப்பினர் இஷார அனுருத்த என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை க்ளேண்லேண் தோட்டத்தில் வசித்த கெளரி சசிகலா மற்றும் அவரது 5 வயது சிறுமி ஜெகதீஸ்வரன் யதுர்ஷனா ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யபட்டுள்ள சந்தேக நபர் நால்வரும் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் குற்றத்தின் கீழும் அதில் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றத்தின் கீழும் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

