கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் மற்றும் வர்த்தக கற்கைகள் பீடத்தின் 2016/17 கல்வியாண்டுக்கான புதிய மாணவர் அனுமதி காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
புதிய மாணவர் அனுமதி 5ம் திகதி நாளை நடைபெறவிருந்ததாகவும் குறித்த பீடங்களில் தற்போது கல்வி கற்கும் மாணவர்கள் மேற்கொண்டிருக்கும் தொடர்ச்சியான வகுப்பு பகிஷ்கரிப்பு காரணமாக அனுமதி காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி வீ.கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த அனுமதிக்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

