100 நாள் வேலைத்திட்டம் மைத்திரியுடையது அல்ல – ஹரின்

194 0

நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் மைத்திரியுடையது அல்ல எனவும் அது பொது அபேட்சகரை வெற்றிபெறச்செய்ய ஒன்று சேர்ந்த குழுவின் வேலைத்திட்டம் என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது ஒரு சிலர் ராஜபக்ஷக்களுடன் சேர்ந்துகொண்டதால் என ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Leave a comment