பிரதி சபாநாயகர் தெரிவு 5 ஆம் திகதி அமர்வில்- பாராளுமன்ற பிரதி செயலாளர்

334 0

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வின் போது பிரதி சபாநாயகர் ஒருவர் புதிதாக தெரிவு செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இராஜினாமா செய்ததன் மூலம் தற்பொழுது வெற்றிடமாகவுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கே புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

இதற்காக ஆளும் கட்சியில் ஒருவரின் பெயரும், எதிர்க் கட்சியில் ஒருவரின் பெயரும் பிரேரிக்கப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படும் எனவும் பிரதி செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment