லண்டனிலிருந்து நாடு கடத்தப்படவிருக்கும் தமிழ் இளைஞன்!

3300 0

லண்டனிலிருந்து தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படுவதற்க்காக பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த லோகராஜ் அருளானந்தம் என்பவரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார்.

இலங்கை அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்கும் வகையில் புலத்தில் செயற்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.

எனினும் இவரது தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 17 /01 /2018 முதல் Tinsley House Immigration Removal எனும் தடுப்பு முகாமில் நாடு கடத்தலுக்காக குடிவரவுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டடுள்ளார் .

ஸ்ரீலங்காவில் தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகவும் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள், கொலைகள், கடத்தல்கள், நில அபகரிப்பு போன்ற அராஜக நடவடிக்கைகளை சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறும் வகையிலும் எடுத்துரைத்தவர்.

ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி பன்னாட்டு நீதி விசாரணைப் பொறிமுறையை நிறுவக்கோரி பல்வேறுபட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து,

தமிழின சுயநிர்ணய உரிமைக்காக பரப்புரைகள், பிரச்சாரங்களில் ஈடுபட்டு குரல் கொடுத்துவந்த இவர் நாடு கடத்தப்பட்டால்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி உயிராபத்து ஏற்படலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதோடு தேவையான சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment