தனியார் வங்கிகளுக்கு கண்டனம் தெரிவித்த மனோ

1321 0

போரில் மரணித்த உறவுகளை நினைவு கூர்ந்த ஊழியர்களை இடை நிறுத்தம் செய்துள்ள தனியார் வங்கியின் செயல் கண்டிக்கத்தக்கது. இது ஒரு மோசமான பெருநிறுவன நடவடிக்கை. இவ்வங்கியின் பொன்மொழி “வளர்ச்சியின் பங்காளர்” என்றுள்ளது. மனிதம் இல்லாத வளர்ச்சியா? இனவாத பார்வையுடன் பங்காளரா?

அடுத்தது, இது ஒரு தனியார் வங்கி. அரச வங்கி அல்ல. ஆகவே இந்த செயல் தவறானது என பகிரங்கமாக கூறி, ஒரு கருத்தோட்டத்தை நான் ஏற்படுத்துகிறேன். இது உங்களுக்கு புரியவில்லையா? இது என் அதிகாரபூர்வ ஊடக தளம். இங்கே நான் தெரிவிக்கும் கருத்து, சாதாரண மக்கள் விசனம் தெரிவிப்பதை போன்றதல்ல.

அமைச்சர் மனோ கணேசன் கண்டித்துள்ளார் என்ற செய்தி, தற்போது குறிப்பிட்ட வங்கியின் தலைமை நிர்வாகிகளின் கவனத்துக்கு போய்விட்டது. மேலும் எனது செயலாளர் எனது அறிவுறுத்தலின்படி வங்கியின் தலைவருக்கு எனது கண்டன கருத்தை தெரிவித்து அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளார். எனது கடிதம் பற்றிய செய்தி எதிர்வரும் தினங்களில் நாட்டின் ஊடகங்களில் வெளிவரும் போது அது இந்த வங்கியின் தொழிலை பாதிக்கும். அது இந்த வங்கி நிர்வாக அதிகாரிகளுக்கு தெரியும்.

நான் மனோ கணேசன். நடிகர் சிவாஜி கணேசன் அல்ல. அவசியமானால் இந்த வங்கியில் இருக்கின்ற கணக்குளை மூடுங்கள் என தமிழ் மக்களுக்கு என்னால் பகிரங்க அழைப்பு விடுக்க முடியும். நான் அப்படி செய்யக் கூடியவன் என்பது இவர்களுக்கும் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்.

எல்லோரும் கண்டிக்கலாம். ஆனால் நான் கண்டிக்கும்போது, என் மக்கள் எனக்கு தந்த என் பதவி காரணமாக, அதற்கு ஒரு “வெயிற்” இருக்கிறது. மேலும் நான் இந்நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரவை அமைச்சர் என்பதையும் மறவாதீர்கள்.

Leave a comment