இணைய மோசடியைத் தடுத்த முயன்ற நிறுவனத்திற்கு விருது!

250 0

இணைய மோசடி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இணைய விற்பனையாளர்கள் அல்லது அதிகாரிகள் போல் பாவனை செய்து, பிறரின் தனிப்பட்ட தகவல்களையும் வங்கிக் கணக்கு விவரங்களையும் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நேர்ந்துவரும் வேளையில், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இணைய மோசடிச் சம்பவங்களைக் கையாள உதவியிருக்கும் ஒரு நிறுவனம், Xfers.

அது இணையக் கட்டணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுவருகிறது.

காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி, சுமார் 37,000 வெள்ளி பெறுமானமுள்ள சட்டவிரோதமான பரிவர்த்தனைகளை அந்த நிறுவனம் தடுத்துள்ளது.

அந்நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அதற்குப் பாராட்டுத் தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விருது நிகழ்ச்சியில் அந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

மோசடிகள் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள, தனியார் நிதி நிறுவனங்கள், மின்-வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுடன் காவல்துறை தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது.

Leave a comment