அரச திருமணத்திற்குப் பிறகு பூக்கள் எங்கு சென்றன?

204 0

லண்டனின் செயிண்ட் ஜோசஃப்ஸ் முற்றிய நோயாளிகள் இல்லத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பொட்டலம் ஒன்று அனுப்பப்பட்டது.

பொட்டலத்தில் என்னென்ன இருந்தன?

இளவரசர் ஹேரி, மேகன் மார்க்கலின் அரச திருமணத்தை அலங்கரித்த மலர்கள் அந்தச் சிறப்புப் பொட்டலத்தில் இருந்தன.

திருமண நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின் அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பூக்களைத் துக்கிப் போடுவது வழக்கம்.

ஆனால், அவற்றை முற்றிய நோயாளிகள் இல்லத்திற்கு அன்பளிப்பாக அனுப்பி அங்குள்ள முதியோருக்கு புத்துணர்ச்சி ஊட்ட மணமக்கள் விரும்பினர்.

அழகிய மலர்களைப் பெற்ற இல்லம் அவற்றைப் பூங்கொத்துகளாக மாற்றி, முதியோருக்குத் தந்து அவர்களை மகிழ்ந்தது.

அதுபற்றி இல்லம், ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தது.

எல்லாப் பூக்களும் அந்த முற்றிய நோயாளிகள் இல்லத்தைச் சென்றடையவில்லை.

மேர்கலின் தனிப்பட்ட பூங்கொத்து, 1000 ஆண்டுப் பழமையான Westminster Abbey தேவாலயத்திலுள்ள அடையாளம் தெரியாத பிரிட்டிஷ் போர் வீரரின் கல்லறையில் கிடத்தப்பட்டது.

அவ்வாறு செய்வது, பிரிட்டிஷ் அரச குடும்பத்துப் பழக்கம்…

Leave a comment