நாட்டில் ஒரு நாய் கூட வந்து முதலீடு செய்வதில்லை – மஹிந்தானந்த

256 0

“இலங்கையில் ஒருநாய் கூட முதலீடுகளை மேற்கொள்வதில்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வின் தினப்பணிகளை ஒத்திவைத்து, தற்போது நிலவும் வானிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தநிலைமை குறித்து விவாததம் நடத்தக்கோரி ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில் கோரிக்கை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத்து தெரிவிக்கையில், “நாட்டு மக்கள் இன்று விலை வாசியாலும் இயற்கை அனர்த்தங்களாலும் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டின் முதலீடு குறித்து பேசுவதில்லை அர்த்தமில்லை. ஏனென்றால், இங்கு ஒருநாய் கூட வந்து முதலீடு செய்வதில்லை” எனத் தெரிவித்தார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் உரைக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க “மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து சபையை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

“இன்று ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுபோல், இயற்கை அனர்த்தங்களும் மக்களிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எரிபொருள் விலைவாசி குறித்து பேசும் நேரத்தில், அனர்த்த பிரச்சினை குறித்தும் உள்ளீர்த்து விவாதிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment