கூட்டு எதிர்க் கட்சியின் விசேட வேண்டுகோள் குறித்துப் பேசுவதற்கு இன்று(22) கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விஷேட விவாதம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இன்று(22) கூடும் பாராளுமன்ற அமர்வின் போது இந்த விவாதத்தை நடாத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறும் அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தீர்மானம் எடுப்பதற்கே சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற அனர்த்த நிலமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன தொடர்பில் விவாதிப்பதற்கே இந்த அவகாசத்தை கூட்டு எதிர்க் கட்சி கோரியுள்ளது.

