எரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் தண்டனை வழங்கப்படும் – அர்ஜுன

255 0

எரிபொருள் விலை அதிகரித்த தினத்தன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பெற்றோலிய விலை கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டது.  இது தொடர்பாக அரசாங்கத்தினால் அன்றைய தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதன்போது, எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தல் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து அன்றைய தினம் நள்ளிரவு விலை அமுலுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில் (Same Day System) இத் திட்டத்திற்கு அமைய புதிய எரிபொருள் விநியோகம் மற்றும் அதற்கான விநியோக கேள்வி தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இதற்கு காரணம் குறைந்த விலையில் எரிபொருளை வாங்கி கூடிய விலையில் விற்பதை தடுப்பதற்காக. ஆனால் கடந்த 10 ஆம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளான கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல இருந்து (Same Day System) இற்கு அமைய 74 எரிபொருள் கொள்கலன்கள் எரிபொருளை நிரப்பி, விநியோகித்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய கொலன்னாவை களஞ்சியசாலையில் இருந்து 55 எரிபொருள் கொள்களன்களும், முத்துராஜவெலவிலிருந்து 22 எரிபொருள் கொள்களன்களும் வெளியேறியுள்ளன.

இதனால் கொலன்னாவைக்கு ரூபா 6580200 நட்டமும் முத்துராஜவலவிலிருந்து ரூபா 2468400 நட்டமும் ஏற்பட்டடுள்ளது.

முதற்கட்ட விசாரணனைக்கமைய அன்றைய தினம் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களும் பாரிய தொகையளவு எரிபொருள் கேள்வியை விடுத்திருந்தது. இந்த ஊழல் மோசடி சாதாரண விதிமுறைகளை மீறி இடம்பெற்றுள்ளது.

ஒருவாரமாக எரிபொருள் நிரப்பாமல் இருந்த சில எரிபொருள் நிலையங்கள் அன்றைய தினம் எரிபொருளை நிரப்பியுள்ளது. பணம் செலுத்திய சிலர் எரிபொருளை  பெறவில்லை ஆனால் அன்றைய தினம் பதிவு செய்தவர்கள் (Same Day System)எரிபொருளை பெற்றுள்ளனர்.

ஆகவே இதில் ஈடுபட்ட நபர்களை கண்டிறிவதற்கு நாங்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளோம். மேலதிக விசாரணையை மேற்கொள்ள FCID க்கு வழங்கவுள்ளோம். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் திருடர்களை பிடிப்பதில் சில அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment