முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்கமைப்பு பணிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலையிலான குழுவினர் இன்று (16) மாலை நேரில் பா ர்வையிட்டுள்ளனர்.
மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் இடத்தில் ஒழுங்கமைப்புக்களை முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலமையில், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாணசபை உறுப்பினர்களான சிவயோகம், குருகுலராஜா உள்ளிட்டோர் நேற்று மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்காலுக்கு சென்றிருந்தனர்.
அங்கு நினைவேந்தல் பிரதான சுடர் ஒழுங்கமைப்புக்கள் மற்றும், மக்களுக்கா ன ஈகைசுடல்கள் மற்றும் பொதுமக்களுக்கான பந்தல் ஒழுங்குகள், பயண ஓழுங்குகள், குடிநீர் ஒழுங்க மைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் செயலாளர் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடனும், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களுடனு ம் ஆராய்ந்தது.
தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் இந்த ஆண்டு முள்ளி வாய்க்கால் நினைவேந்தலுக்காக சகல தரப்பினரதும் ஒத்துழைப்புக்களையும் பெற்று, உணர்வுபூர்வமா க நினைவேந்தல் நடத்தப்படும் என கூறியிருக்கின்றார்.

