நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பம்

338 0

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டம் கடந்த 09ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் மூலம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட நீதிமன்றம் நடைமுறைக்கு வரும் என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment