வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் அனைத்து பொலிஸ் துறை உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு பொலிஸ் துறை உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

