நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவின் தலைமைப் பதவிக்கு ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(14) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

