கட்டுநாயக்க 18ம் கட்டை புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி வருகை தந்த புகையிரதம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதால் காரணமாக குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 49 வயதுடைய பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

