இந்தியாவிடம் முடியாததை சிங்கபூருடன் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சி

221 0

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தின் வாயிலாக செய்துக்கொள்ள முடியாத அனைத்து விடயங்களையும் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக செய்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

எட்கா ஒப்பத்தின் மூலம் செய்துகொள்ள முடியாத விடயங்கள் அனைத்தும் சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் மூலம் செய்துக்கொள்ள முடியும்

சிங்கப்பூடனான அந்த ஒப்பந்தத்தில் மூலம் இலங்கையின் மனித வளங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.

எட்காவுக்கு எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் அரசாங்கம் அதற்கு சமான ஒப்பந்தம் ஒன்றை சிங்கப்பூருடன் செய்துக்கொள்ள முற்படுவதாகவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

Leave a comment