எரிபொருள் விலை அதிகரிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் வேறு வழியில்லை-ரணில்

220 0

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை விமான சேவைகள் ஆகியவற்றிற்கு மேலதிக கடனுக்கு சேவையை பெற்றுக்கொடுப்பதாலேயே கனியவள எண்ணெய் கூட்டுத்தாபனம் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி ஹக்கடுவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை விமான சேவைகள் ஆகியன 70 பில்லியன் ரூபாவை கனியவள எண்ணை கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டும்.

எண்ணை விலையை கட்டுப்படுத்த, எரிபொருள் விலையை அதிகரித்து நட்டத்தை ஈடு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அதிகரித்த எண்ணை விலையை தாங்கிக் கொள்வது மிகவும் சிரமமான விடயமே.

என்றாலும் இதற்கு மாற்று தீர்வு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a comment