மத்திய மாகாணத்தில் பெய்துவரும் அடை மழையினால் நாவலப்பிட்டி நகரம் நீரில் மூழ்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.
இன்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையில் நகரின் பிரதான வீதி நீரில் மூழ்கியதுடன் சந்தைப்பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வெள்ளப்பெருக்கினால் பாடசாலை மாணவர்கள் உட்பட நகருக்கு வருகை தந்தோர் பாதிப்புக்குள்ளாகியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நகரின் நீர் வடிகாலமைப்பு முறையாக இல்லாத நிலையிலே மழைக் காலங்களில் வெள்ளம் பெருக்கெடுப்பதாக நகர மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

